சாரா டக்கர் கல்லூரி
சாரா டக்கர் கல்லூரி என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள ஒரு மகளிர் கல்லூரி ஆகும். இதுவே தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் மகளிர் கல்லூரி ஆகும். இங்கிலாந்தின் சாரா டக்கர் மற்றும் அவரது நண்பர்கள் பணத்தைத் திரட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் தொடக்கப் பள்ளிகளுக்கு தேவைப்படும் ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் கல்விக்கூடமாக இதை தோற்றுவித்தனர். இதன் பின்னர் சாரா டக்கர் உயர்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டது, இது 1895 இல் ஒரு கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. இசபெல்லா தோபர்ன் கல்லூரிக்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது பழமையான கல்லூரி இதுவாகும். இன்று இது ஒரு முதுகலை நிறுவனமாக உள்ளது. இந்தக் கல்லூரியில் ஆய்வகங்கள், நூலகம், கணினி மையம், விளையாட்டு அரங்கு போன்றவை உள்ளன. கல்லூரியில் ஐந்து விடுதிகள் உள்ளன. இதில் சுமார் 600 மாணவிகள் தங்கியுள்ளனர்.



